Sunday, March 15, 2015

கண்டியன் கோயில்

கொங்கதேசத்தின்  மைய பகுதியான  காங்கயம்  அருகே உள்ள  பொன் கொழிக்கும் நாடான பொங்கலூர்  நாட்டில்  உள்ள  கண்டியன்கோயல் காணியை பற்றிய அரிய தகவல்கள்.

* பொட்டல் காட்டில் பழமையுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கம்பத்து ஈஸ்வரன் கோயிலின்  புராதான பெயர்  கண்டிஸ்வரர் கோயில்.


* கொங்கதேசத்தில் உள்ள பழைய வெள்ளாளர்களின் கோயில்களில் சூரியன் மட்டுமே இருக்கும்,ஏன் எனில் வெள்ளாளர்கள்  சூரிய வம்சம் என்பதால்.
சந்திரன் சிலையோ, லிங்கோத்பவரோ, துர்க்கையோ, பிரம்மாவோ,நவகிரஹமோ, சனிஸ்வரனோ இல்லை என்பது இந்த கோயிலை பார்த்தாலே புரியும்.

*கன்னிமூலை விநாயகர் சுயம்பாக உள்ளார். முருகர் சன்னதி முன்பு நாகர் இருப்பது அரிது.

*சிவன் சிலையை யாரோ திருடிகொண்டு சென்றுவிட்டார்கள்.
அம்பாள் சன்னதியின் அர்த்த மண்டபம் முழுக்க  பாம்பு சட்டை இருக்கிறது.

* பல நுணக்கமான சிற்ப வேலைபாடுகள் கொண்ட இக்கோயில் பிற்கால பாண்டியன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை கோயில் கட்டிட அமைப்பை வைத்து உறுதி செய்யமுடிகிறது.* பூர்வீக கோயில் சிவாச்சாரியார்கள் காசிப கோத்திரம். கோயிலில் கெட்ட ரிஷிகள் சுத்துவதால் யார் பூஜை செய்ய ஆரம்பித்தாலும் 90 நாட்களுக்குள் இறந்துவிடுகிறார்கள். கடைசியாக 30 வருடங்களுக்கு முன் பூஜை செய்த சிவாச்சாரியார் நான்காம் நாள் இறந்து விட்டார். தற்போது புது கோயிலில் பூஜை செய்பவர் அவரது மாப்பிளை மார்கண்டேய கோத்திரம். அவரையும் பூஜை செய்ய அழைத்து வந்துள்ளார்கள்.கோயில் அருகே வந்தவுடன் திடிரென்று முகமெல்லாம் அம்மை வார்த்துவிட்டது. அதனால் கோயிலுக்குள் செல்லாமல் திரும்பி வந்துவிட்டார். அங்குள்ள மாரியம்மன் தான் தன்னை காப்பாற்றியதாக கூறினார்.

* ஆய்வுக்கு சென்ற எங்களுக்கும் தடைகள் வந்தது, காரில் கோயிலுக்கு சென்று திரும்பும் போது, கோயிலை தாண்டி 50 அடி தூரம் கூட வரவில்லை, வாகனம் பழுதடைந்து விட்டது. ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. உயிரை கையில் பிடித்துகொண்டு தப்பிச்சோம், பிழைச்சோம் என்று வந்துவிட்டோம். அங்குள்ள சத்தி ஏதோ ஒன்று தடுக்கிறது.* சிவன் சொத்து குல நாசம். கோயிலுக்கு சேர்ந்த நானுறு ஏக்கருக்கும் மேலான நிலங்களை பலரும் ஆக்கிரமிச்சு குடும்பம் சிதைந்து கொண்டு இருப்பதை பார்க்கும் போது மனம் சற்று வேதனையாக உள்ளது.

* கோயிலுக்கு கிழக்கே உள்ள பப்பீஸ் பனியன் தொழில் சாலையின் கழிவுகள் அனைத்தும் கோயிலுக்கு பின்புறம் உள்ள நிலத்திலேயே கொட்டி நாசம் செய்வதை தட்டி கேக்க  நாதியில்லை.

* கண்டியன் கோயில் ஒதால கோத்திரத்தாரின் கவனத்திற்கு, குலகுருவான பேரூர் மேலை மடம் ஞானசிவாச்சாரியாரிடம் அறிவுரை கேட்டு தகுந்த பூஜைகள் செய்த பிறகே பூஜையை தொடருங்கள்.
கோயில் இல்லா ஊரில் குடி இருக்கவும் கூடாது,
கோயில் இருந்தும் பூஜை செய்யாமல் இருக்கவும் கூடாது.
http://perurmatam.blogspot.in/

* பொங்கலூர் நாட்டில் அதிகமாக கிடைத்த  ஓடைகல்லால் காலம் கடந்தும் கம்பீரமாக இருக்கும் மதில் சுவர் எழுப்பியிருப்பதை பார்க்கும் போது கனிமவளத்தை அளித்து கட்டும் தற்போதைய மதில் சுவர் தேவையா என்னும் கேள்வி எல்லாருடைய மனதிலும் எழும்.

* கம்பத்து ஈஸ்வரன் கோயில் குறித்து பார்த்தோம். இனி கண்டி நகர் பற்றியும், அங்க வாழும் காணி தலைவர்கள் வம்சம் பற்றியும் பார்ப்போம்.

* கண்டிநகர்  என்பது கண்டியன்கோயிலின் பழைய பெயராக அலகுமலை குறவஞ்சி குறிப்பிடுகிறது. இந்த ஊர் மிகபெரிய  வணிக நகரமாக முந்தைய காலங்களில்  இருந்துள்ளது.


* பொங்கலூர் நாட்டின்  பெரிய பட்டமான கொலுசேனை மன்றாடியார் பட்டம் பெற்ற கொடுவாய்  ஒதால கோத்திரத்தின் பிரவியான் மரபில் வந்த பெரிய பெருமாளுக்கு இரண்டு தம்பிகள் மற்றும் நான்கு மக்கள்.

* இரண்டு தம்பிகளில் ஒருவர் குண்டடம் சமஸ்தானத்தையும்,
ஒருவர்  பெருந்தொழுவு சமஸ்தானத்தையும் ஆட்சி செய்து வந்தனர்.

* பெரியபெருமாளின் நான்கு மக்களில் மூத்தவர் தளிகை(அவினாசிபாளையம்) காணியையும், இரண்டாவது மகன் நல்லுடையான் கண்டியன் கோயில் காணியையும், மூன்றாவது மகன் நெழலி காணியையும், நான்காவது மகன் காட்டூர் காணியையும் ஆட்சி செய்து வந்தனர்.* நல்லுடையா கவுண்டர் தான் கண்டியன் கோயில் காணியின் சிற்றரசர்.
இவர் பொண்ணு எடுத்து கட்டி கொண்டது பயிரன் கூட்டத்து பழையகோட்டை சர்க்கரை மன்றாடியார்(தீரன்  சின்னமலை) வம்சாவளியில்,

* வெள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்ட தீரன் சின்னமலையை சென்னிமலை தேரில் கட்டி வைத்து அடித்தும் இவரே. இதை அறிந்த வெள்ளோட்டில் இருந்த தீரன் சின்னமலையின் தங்கைக்கு அவமானம் தாங்க முடியாமல் நல்லுடையான் தலையை கொய்து வருமாறு தீரன் சின்னமலையிடம் உத்தரவிடுகிறாள்.


* தீரன் சின்னமலையும் சின்னஆரியபட்டியில் உள்ள இரண்டு புளியமரத்தின் நடுவே நல்லுடையானை வெட்டி சாய்த்து விட்டதாக வரலாறு.

* நல்லுடையான் குறித்து இன்னொரு கதையும் உள்ளது. கம்பத்து கோயிலில் ஆடி மாசம் வேட்டை ஆடுவது வழக்கம். அப்படி ஒரு சமயம் வேட்டை ஆடிகொண்டே கண்டி வனம் (தற்போயை புதிய கண்டிஸ்வரர் கோயில் உள்ள பகுதி) செல்லும் வழியில் கள்ளி மிகுந்த பகுதியில் நல்லுடையா கவுண்டர் கிழே விழுந்து இறந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.* நல்லுடையா கவுண்டரின் பங்காளி வாரிசுகள் இன்றும் ஆரியபட்டி பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment